வடக்கில் உள்ளவர்கள் தீவிரவாதிகளென தெற்கில் உள்ளவர்கள் கருதுகின்றனர் – சீவி

687 0

வடக்கில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் என தெற்கில் உள்ளவர்கள் கருதுவதாக வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுப்பட்டதனையடுத்து, மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை சந்தித்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்க வில்லை.

சமஸ்டி முறையிலான ஆட்சி முறை ஒன்றையே கோருகின்றனர்.

இதனை நாட்டை பிளவுப்படுத்துவதற்கான முயற்சி என பிரச்சாரம் செய்கின்றனர்.

சமஸ்டி முறை என்பது நாட்டை ஒன்றிணைப்பதற்கான உபாயம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனினும் சமஸ்டி முறையின் மூலம் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக கூறுகின்றனர்.

அவ்வாறான எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் தமிழ் மக்களிடம் இல்லை.

எனினும் தமிழ் மக்களின் தனித்துவம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஊடக வியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா கூறுவது உண்மையாக இருக்கலாம்.

இராணுவம் தவறிழைத்ததாக தமிழர் தரப்பில் இருந்து குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதையே தமிழர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது.

இந்த விடயம் ஜெனிவா உட்பட உலகின் அனைத்து தரப்புக்களாலும் வலியுறுத்தப்படுகின்ற விடயமாகும்.

எனவே, சரத் பொன்சேக்கா கூறுகின்ற விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இதேவேளை, மகாநாயக்கரை சந்தித்ததன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல்லேகலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.

Leave a comment