யாழ் கல்லுண்டாய் வெளியில் அரச, தனியார் பேரூந்துகள் நேருக்கு நேர் மோதின

21229 0

கல்லுண்டாய் வீதியில் அராலிப் பாலத்துக்கு அண்மையாக அரச பேருந்து ஒன்றும்இ தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதில் அரச பேருந்தில்பயணித்த ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். மற்றும் சிலர் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர்.அராலியூடாக சித்தன்கேணி செல்லும் பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை பொலிஸார் சம்பவ இடத்துக்குவரவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.இ.போ.ச. பேருந்தும்இ தனியார் பேருந்து போட்டியிட்டு பயணித்தன என்று அங்கிருந்தவர்கள்தெரிவித்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த இ.போ.ச. பேருந்தை தனியார் பேருந்து முந்திச்செல்ல முற்பட்டபோது விபத்து நடந்தது என்றும் கூறுகின்றனர்.

தனியார் பேருந்து முந்திச் செல்ல முற்பட்டபோது இ.போ.ச.பேருந்தின் முன்புறத்துடன்மோதுண்டது என்றும்இ இ.போ.ச. பேருந்தின் முன்பகுதி சேதத்துக்குள்ளானது என்றும்கூறப்படுகின்றது. பேருந்துகள் மோதியதில் இ.போ.ச. பேருந்தில் பயணித்த ஒருவர் வெளியேவீசப்பட்டு காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்தில் நின்று பயணித்தவர்கள் கீழேவிழுந்து பாதிப்புகளுக்களுக்கு உள்ளாகினர் என்றும் கூறப்பட்டது.

சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக அரச பேருந்தும்இ தனியார் சிற்றூர்தியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த பயணிகள் பயணத்தைத் தொடர முடியாது பெரும் இக்கட்டைஎதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பேருந்துகள் அரை மணி நேரத்துக்கும் மேலாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்தால் பெரும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரை மணி நேரத்துக்கு முன்னதாக பொலிஸாருக்குஅறிவிக்கப்பட்டும் பொலிஸார் இதுவரை சம்பவ இடத்துக்கு வராதால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள்காத்திருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment