தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் வீடொன்றின் உரிமையாளராக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நாடு பூராகவும் 454 கிராமங்களை உருவாக்கும் வேலைத் திட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
திம்புலாகல, மீவத்புர “சந்தரெஸ்கம” கிராமத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “சேமட்ட செவன” தேசிய வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற 40 மாதிரிக் கிராமம் இதுவாகும் என்பது கூறத்தக்கது.