முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரத்துங்கவை கைது செய்ததன் மூலம் முழு அரச பணியாளர்களும் தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் – கொபைகனே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அரச கொள்கை ஒன்றின் பிரகாரமே கடந்த காலத்தில் பிக்குமார்களுக்கான ஆடைகள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக அது செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.
லலித் வீரதுங்க கைது செய்யப்பட்ட இந்த செயற்பாடானது ஒரு அரசியல் பழிவாங்கல் ஆகும்.
தாம் ஜனாதிபதியாக இருந்த போது தம்மால் வழங்கப்பட்ட உத்தரவொன்றிற்கு அமைய செயற்பட்டமையினாலேயே, லலித் வீரத்துங்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.