20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும்-நசீர்

308 0

13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்காத வகையில் 20 ஆம் திருத்தம் முன்வைக்கப்பட்டால் அதனை கிழக்கு மாகாண சபை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் மாகாண சபையினை நாடாளுமன்றம் கட்டுப்படுத்தும் வகையிலான சில சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவை கட்டாயம் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் 20 ஆம் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவை மாகாண சபைகளை வலுப்படுத்தும் 13 ஆம் திருத்தத்திற்கு முரணானவையாகும்.
எனவே அவற்றை திருத்தி 20 ஆம் திருத்தம் முன்வைக்கப்படுமாயின் நாட்டின் நலன் கருதி அதனை சாதகமாக பரிசீலிக்க கிழக்கு மாகாண சபை தயாராகவுள்ளதாகவும் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

Leave a comment