288 கிராமுக்கும் அதிக எடை கொண்ட தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் டுபாயில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விமான நிலைய அதிகாரிகளினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வற்றில் 3 தங்க மாலைகளும் 13 காப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.