கைதிகளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு புதிய விதிமுறைகள்-சுவாமிநாதன்

282 0

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியையும் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின் சிறைச்சாலை வைத்தியசாலையின் மூன்று வைத்தியர்களின் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு வைத்தியரின் அனுமதியுடனேயே கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளதுடன், இனிவரும் காலங்களில் மூன்று வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்ளும் அனுமதியின் போது மாத்திரமே எந்தவொரு கைதியையும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர், சி​றைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அது சம்பந்தமான வைத்திய அறிக்கை அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மோசடிகள் இடம்பெறுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment