போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவவும், நினைவுத் தினம் ஒன்றை அறிவிக்கவும் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனைத் தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூற பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவ வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்தார்.
அத்துடன், நினைவுத் தினம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.