சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளிற்கமைவாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதியுதவியில் யாழ் தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வறிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் காரைநகர் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஏ.அப்துல்கமீத் அல் முல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
வுடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் சிங்கள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்க தாம் எப்போது தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஏ.அப்துல்கமீத் அல் முல்லா இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்
இதனடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட தீவகவலயத்திற்குட்பட்ட ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான 1613 வறிய பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதிவாய்ந்த பாடசாலை புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் இவ்வாறு வழங்கப்பட்டன.
காரைநகர் பிரதேச செயலாளர் தயாபரன்,தீவக வலயக்கல்விப்பணிப்பாளர் சுந்தரசிவம் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.