உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்குவதில்லையென அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இந்த பிரதான இரு நிறுவனங்களும் எதிர்காலத்தில் உதவிகளை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதனால் எதிர்வரும் காலங்களில் நிதி உதவிக்கான வழிகள் குறித்து ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.