யாழ்.பலாலி இராணுவ படைத் தலைமையத்தில் இருந்து இராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார்.
காங்கேசன்துறை ஊறணி பகுதியில் உள்ள 4வது படைப்பிரிவினைச் சேர்ந்த இவர் நேற்று முதல் இருந்து தலைமறைவாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பலாலி படைத்தலைமையகத்தில் உள்ள காவலரணுக்கு காவல் கடமைக்குச் சென்றவர் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார்.
பதில் கடமைக்குச் செல்லும் போதே கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் காணாமல் போயுள்ளதை இராணுவத்தினர் அறிந்துகொண்டுள்ளனர்.
இதுவரையில் தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய் தொடர்பான தகவல்களை இராணுவத்தினர் வெளியிடவில்லை என்றும் படைத் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.