இந்திய மஹராஸ்ட்ரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் உள்ள அரச மருத்துவமனையில் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறை காரணமாகவே அந்த குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போதுவரை அந்த மருத்துவமனையில் 187 குழந்தைகள் மரணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், அது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, கடந்த மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் (புழசயமரிரச) உள்ள மருத்துவமனையில் 70 குழந்தைகள் உயிரிழந்தமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதேபோல், அங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரச மருத்துவமனையில் கடந்த ஜூலை 20ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரையிலான காலத்தில் மாத்திரம் 49 குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த சம்பவங்களின் அடிப்படையில், இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் உடனே இறக்கும் நிலைமைகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.