வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.
இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மல்வத்து பீட மஹா நாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் முதலமைச்சர் சந்திக்கவுள்ளார்.