உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று ஐதரபாத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருதரப்பு உறுவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் திலக் மாரபன நாளை நாடுத்திரும்பவுள்ளார்.