நிவ்யோர்க்கில் செயற்பட்டு வந்த பாகிஸ்தான் வங்கி ஒன்றை மூடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த வங்கிக்கு 225 மில்லியன் டொலர்கள் அபராதமும் நேற்று விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செயற்பட்டு வந்த குறித்த பாகிஸ்தான் வாங்கியானது, அமெரிக்க அரசாங்கத்துடன் கடந்த 2006ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பணமோசடி, தீவரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் அமெரிக்க நிதிச் சேவைக்கு கடந்த வருடம் தகவல்களை வழங்காதிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த வங்கி மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நடவடிக்கைகள் தமது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் எனக் கருதி அந்த வங்கியின் நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.