முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸ கையூட்டல் ஒழி;ப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானர்.
சிரிலிய சவிய அமைப்பின் சொத்து மற்றும் உடமைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் அவர் கடந்த 2015ஆம் ஆண்டிலும் கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இததேவேளை, பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ் இன்று மூன்றாவது நாளாகவும் பிணை முறி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.