மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
இதுவரைக் காலமும் அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில்தான் சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
ஆனால், கடந்த ஆண்டில் மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.