தண்ணீர் கட்டணத்தில் அதிகரிப்பு – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

272 0

தண்ணீர் கட்டணத்தில் சிறு அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதல் 15 அலகுகளுக்காக ஆகக் குறைந்த கட்டணமாக 100 ரூபா அறவிடப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்திலேயே சிறு அதிகரிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்கு அதனால், தாக்கம் ஏற்படாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Leave a comment