சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் கைத்தொலைபேசியே – ஜனாதிபதி

297 0

சிறுவர்களுள் பெரும்பாலானோர் தமது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு கைத்தொலைபேசி மற்றும் இணையத்தள பாவனைகளே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர்களைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளின் கண்டி – திகனயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்கொலைகள் தொடர்பான உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணிலையில் உள்ளது.

சிறுவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

எனவே, சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பாகும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

கைத்தொலைபேசிகள் மற்றும் கணினிகள் என்பன மனித சமுதாயத்தின் நன்மைக்காக அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால், அதனூடாக இன்று நன்மைகள் மட்டுமன்றி தீமைகளும் ஏற்படுகின்றன.

வீதிகள் மற்றும் தொடரூந்து வீதிகளில் செல்லும்போது சிறுவர்கள் கைத்தொலைபேசியை பயன்படுத்தியவாறு, ஏன்ஸ்பிரியை காதில் மாட்டிக்கொண்டு செல்கின்றனர்.

இதனால், எத்தனை உயிர்கள் பலியாயின என்பது அனைவருக்கும் தெரியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிலர் அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்துக்கு வந்து, அதில் கவனம் செலுத்துவதில்லை.

அவர்கள் ஏன்ஸ்;பிரியை காதில் மாட்டிக்கொண்டு கூட்டத்தில் தலையசைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இதன்போது தாம் கூறுவதும், அமைச்சரவையில் கலந்துரையாடப்படுவதும் அவர்களுக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அமைச்சரவைக் கூட்டத்தின்போது கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுததுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment