கருக்கலைப்பை சட்ட ரீதியானதாக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பை சட்டரீதியானதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விடயம் குறித்து, தாம் பிரதமரிடம் வினவியதாகவும், அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ள வில்லை என அவர் தம்மிடம் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமது வருமானத்தை நோக்கமாகக் கொண்டு சில வைத்தியர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.