இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று மோடி மற்றும் சுஷ்மாவை சந்திக்கிறார்.

326 0

வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இன்று சந்திக்கவுள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று அவர் டில்லி பயணமானார்.

இந்த நிலையில், இன்று இந்தியப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்திய அரசின் மேலும் சில உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கும் அவர், நாளை தமது பயணத்தை நிறைவு செய்து கொழும்பு திரும்புவார் என்றும் வெளிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment