கனடாவில் வாழும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் 80 வயதில் முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார். மீசாலையை சேர்ந்த திருமதி யோகரட்ணம் செல்லையா என்ற ஆசிரியையே 80 வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த வார இறுதியில் யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல் நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திருமதி யோகரட்ணம் பட்டம் பெற்றார். யோகரட்ணம் திருக்குறளிற்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் விளக்கவுரை தந்தவர். அத்தோடு பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் – 4 (மீசாலை) நூலை வெளியிட்டவர். அமரர் முத்தமிழ் வித்தகர் திரு. அ.பொ. செல்லையா அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.