நீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. அதனால் சமூர்த்தி பெறுகின்றவர்கள் பாதிக்கப்படாத வகையில் நீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்யவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவுூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.