ஜோன்ஸ்டன் வழக்கின் தீர்ப்பு நவம்பர் 10 ஆம் திகதி

317 0

தொடர்ந்தும் ஐந்து வருடங்கள் சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரணாந்துவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (08) அறிவித்துள்ளது.

இந்த வழக்குக்கு எதிராக விடுக்கப்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்த தீர்ப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் உரிய முறையில் முன்வைக்கப்படாத ஒன்று என பிரதிவாதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால், ஜோன்ஸ்டன் பெர்ணாந்துவை குறித்த வழக்கிலிருந்து நிரபராதியாக்குமாறும் ஜோஸ்டனின் சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.

Leave a comment