வறட்சி காரணமாக கடந்த ஒன்றரை மாத காலமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வில்பத்து தேசிய சரணாலயம் நாளை (09) முதல் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படவுள்ளதாக வில்பத்து வனப் பாதுகாப்புக் காரியாலயம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் குறித்த சரணாலயம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.