சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி!

297 0

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்கு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் குற்றவாளி சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த நபர் பிடிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நபர் மீது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதன்போது , குறித்த வழக்கை விசாரித்த அப்போதைய முன்னாள் நீதவான் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

எனினும் , பிரதிவாதி இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார்.

அதன்படி , மேன்முறையீட்டு நீதிமன்றம் , இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய முன்னர் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் வழங்கியுள்ளது.

Leave a comment