டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல்!

297 0

டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில், வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் அச்சுறுத்தும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தினையும் இணைத்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது. அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள்,திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வீடுகள் அனைத்திலும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதாக கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரையும் கை கோர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், இம்முன்னேற்பாட்டு கலந்துரையாடல் முக்கியம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment