அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத்தளபதி சந்திப்பு

222 0
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று (7) ராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும் உடன் கலந்துகொண்டார் எனவும் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, இலங்கைக்கான பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ்.அஸ்லாம் பேர்விஸ் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை இன்று (7) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

அத்தோடு புதிய கடற்படைத் தளபதி வைஸ் அடமிரல் ட்ரவிஸ் சின்னையாவையும் கடற்படை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு வருடங்களாக இலங்கைக்கான பங்களாதேஸ் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் கடமைகளையாற்றி மீண்டும் பங்களாதேசத்திற்கு செல்லும் நிலையில் இவா்களை சந்தித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இலங்கையின் கடற்படை தளபதி மற்றும் இராணுவத் தளபதிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாதுகாப்பு துறை அதிகாரிகள் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment