பசறை, தென்னக்கும்பர பிரதேசத்தில், இன்று (08) அன்று மதியம் இடம்பெற்ற லொறி விபத்தில் படுகாயமடைந்த அறுவர், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக, பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
தென்னக்கும்பர தோட்டத்தில், நேற்று (07) இரவு இடம்பெற்ற தேர்திருவிழாவை அடுத்து, தேரை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக, லொறியில் சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.