மெக்ஸிக்கோவில் பாரிய நில அதிர்வு – 6 பேர் பலி

229 0

மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக 6 பேர் பலியானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

8.1 ரிச்டர் அளவிலான நில அதிர்வே உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மெக்ஸிக்கோ, க்வாட்டமாலா, எல்சல்வடோர், கொஸ்டரிக்கா, நிக்கரேகுவா, பனாமா மற்றும் ஒன்டோருஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி கடற்சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மெக்ஸிக்கோ நகர மக்கள் வீதிகளில் பதற்றத்துடன் ஓடியதாகவும் அங்கு நிலைக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நில அதிர்வுகள் தொடரலாம் என அச்சம் வெளியிட்டுள்ள அதிகாரிகள், கரையோர பகுதி வாழ் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய நில அதிர்வின்போது, மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment