மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி!

284 0
பதுளை – நாரங்கல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார்.
காற்றின் காரணமாக பாதையில் அறுந்து வீழ்ந்திருந்த மின்சாரம் கம்பியை ஒதுக்க முற்பட்ட போது இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் நாரங்கல தோட்டத்தை சேர்ந்த 60 வயதான பெண்ணொருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,  நமனுகுல  தென்னகும்புர பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனம் பள்ளம் ஒன்றில் குடைசாய்ந்ததிலேயே அந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment