சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6165 முறைப்பாடுகள்

615 0

இந்த ஆண்டின் கடந்த காலத்திற்குள் 6165 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

அவற்று 90 வீதமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பது 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக என்று அந்த அதிகாரசபை கூறியுள்ளது.

அந்த முறைப்பாடுகளுள் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சம்பந்தமாகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதுடன், அது தொடர்பில் 1518 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சிறுவர்களுக்கு கல்வி கிடைக்காமை சம்பந்தமாக 975 முறைப்பாடுகளும், சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக 365 முறைப்பாடுகளும், சிறுவர்களை புறக்கணிப்பு செய்தல் சம்பந்தமாக 222 முறைப்பாடுகளும் கிடைத்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

அதேவேளை சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு ஈடுபடுத்துவது சம்பந்தமாக 222 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அந்த அதிகாரசபை கூறியுள்ளது.

Leave a comment