வடமாகாண சபை சுகாதார சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு அமைச்சராக கடமையேற்ற வைத்தியர் ஞா குணசீலன் .அவர்கள் நேற்று தனது முதலாவது விஜயமாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்
அமைச்சராக பதவியேற்ற பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான சுகாதார நிலையங்களான மாவட்ட வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றில் பதவிநிலை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடு மேற்ப்படி நிலையங்களையும் பார்வையிட்டார் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்
அமைச்சராக பதவியேற்ற பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான சுகாதார நிலையங்களான மாவட்ட வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றை தருசிக்க வேண்டும் அங்குள்ள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி அறிமுகப்படுத்திக்கொல்வதொடு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டும் வருகை தந்திருந்தேன்
எனக்கு அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு எனக்கு தெரியும் எனவே எந்த குறுகிய காலக்கேட்டுக்குள் என்னாலான சேவைகளை வளங்கவேண்டுமாக இருந்தால் இந்த மாவட்டத்தினுடைய சுகாதார துறைசார்ந்த உத்தியோகத்தர்கலுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது அதேநேரத்தில் இங்குள்ள மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமானது ஆகவே இங்கு காணப்படும் குறைபாடுகள் முறைப்பாடுகள் சரியான முறையில் எனக்கு தெரிவிக்கப்படும் போது அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கலாம்.
சிலபிரச்சினைகள் மாகாண மட்டத்தில் தீர்க்க முடியும் சில பிரச்சனைகள் மத்திய அரசுடன் பேசி அல்லது வெளிநாட்டு உதவிகள் மூலமாக தீர்க்க முடியும் முற்றுமாக எனது இந்த காலப்பகுதிக்குள் முழு வினைத்திரனுடனான எனது சேவையை வழங்க கடை நிலை உத்தியோகத்தர் முதல் உயர் பதவிநிலை உத்தியோகத்தர் வரை அபிவிருத்தியை இலக்காக கொண்டு என்னோடு சேர்ந்து இயங்கும் பட்சத்தில் மிகுந்த வினைத்திறனான சேவையை வழங்க முடியுமென தெரிவித்தார்.