மியன்மார் (பர்மா) ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ரோஹிங்ய முஸ்லிம்களிற்கு ஆதரவாகவும் யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் அடையாளக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று(8) நடாத்தினர்.
மஸ்ஜித் மர்யம் பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையின் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.
இதன் போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என வலியுறுத்தி சுலோகங்கள் ஏந்தி தமது கண்டனங்கள் எழுப்பப்பட்டன