ரஷியாவில் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமி பரிசு பெற்ற வினோத சம்பவம் நடந்தது.கொசு என்றாலே உலகம் முழுவதும் ஒருவித அலர்ஜியும், பயமும் நிலவுகிறது. முன்பு கொசுவினால் மலேரியா நோய் பரவியது.
தற்போது ‘ஜிகா’ எனும் கொடிய வைரஸ் நோய் பரவுகிறது. பிரேசில் நாட்டில் அதிகம் பரவும் இந்த நோயினால் ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அச்சத்திலேயே அங்கு தங்கியுள்ளனர்.
ஆனால், கொசு கடியின் மூலம் ரஷிய சிறுமி ஒருவர் பரிசு வென்று இருக்கிறாள். ரஷியாவில் பெரிஷ்னிகி என்ற நகரில் கொசுத் திருவிழா சமீபத்தில் நடந்தது.
அதிக கொசுக்கடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இரினா இலியுகினா என்ற 9 வயது சிறுமி போட்டியில் கலந்து கொண்டாள்.
அவள் 43 கொசுக்கடி பெற்றாள். இதன் மூலம் அதிக கொசுக்களால் கடி பட்டவள் என்று அறிவிக்கப்பட்டு ‘செராமிக் கோப்பை’ பரிசு பெற்றாள். அதற்காக கொசு அதிகம் இருக்கும் வனப்பகுதிக்கு தனது தாயுடன் சென்று வந்தாள்.
போட்டி நடத்தப்பட்ட பெரிஸ்னிகி நகரம் யுரல் மலைப்பகுதியில் உள்ளது. இது மிகுந்த வெப்பம் மற்றும் வறட்சியான தட்ப வெப்பநிலையுடன் கூடிய பகுதியாகும். எனவே இந்த ஆண்டு இங்கு பெரும்பாலான கொசுக்கள் அழிந்து விட்டன.