பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் மேலும் நீடிப்பு

310 0

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்துடன் இதன் அதிகாரக் காலம் நிறைவடைந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு மேலும் நீடிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதன்படி மேலும் இரண்டு மாதங்களுக்கு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment