பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்றையதினம் இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சமுர்தி உயர் அதிகாரிகளுக்கு நிலவும் தடங்கல் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.