மறுசீரமைப்பு விடயம் – இலங்கை – அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு என அமெரிக்கா கூறுகிறது

290 0

மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பானது, இலங்கை – அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் பிரதி ராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இரண்டு நாடுகளின் இராணுவத்துக்கும் இடையிலான பரஷ்பர தொடர்புகளை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமது விஜயம் தொடர்பில் அவரால் ராஜாங்க திணைக்களத்தில் முன்வைக்கப்பட்டுள்ள எழுத்துமூல சமர்ப்பனத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a comment