எதிர்காலத்தில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்களில், தங்களது வேட்பாளரை சிறுபான்மைக் கட்சிகள் ஆதரிக்கும் என்று நம்புவதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் 66வது வருட பூர்த்தி மாநாட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஈ.பி.டி.பி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மை கட்சிகள் பங்கேற்றிருந்தன.
இந்த ஐக்கியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருவராலேயே ஏற்படுத்த முடியும்.
இந்த விடயம் எதிர்காலத்தில் சுதந்திர கட்சியின் வேட்பாளரையே சிறுபான்மைக் கட்சிகள் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.