சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரவை காலக்கெடு

307 0

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் சைட்டம் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வு வழங்காவிடின் ஒன்றிணைந்த சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

அந்த பேரவை ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித்த அலுத்கே எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான உரிய தீர்வு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து கொண்டு சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த நிலைமைக்கு இடமளிக்காது உரிய தீர்வை அரசாங்கம் பெற்று கொடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

Leave a comment