விசேட தேவை உடையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது.
சர்வதேச விளையாட்டுத்துறை நீதிமன்றத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா அரசாங்கம் அந்த நாட்டின் போட்டியாளர்களுக்கு ஊக்கமருந்துகளை பாவிக்க அனுசரனை வழங்கியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை சர்வதேச விசேட தேவை உடையோருக்கான ஒலிம்பிக் குழுமம் கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் இந்த தடைக்கு எதிராக ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இந்த போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.