இம்மாதம் 20 முதல் 26 வரையான காலப்பகுதியை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நிகழும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதன் காரணமாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் மூலம் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, தற்பொழுது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதற்குரிய அவதானம் தென்படுவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது