ரணில்- மஹிந்த அவசர சந்திப்பு

509 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சுமார் ஒரு மணித்தியால நேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், அங்கு பேசப்பட்ட விடயங்கள் என்னவென்பது ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment