இர்மா சூறாவளி காரணமாக கரேபிய நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
பல கட்டிடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்ததுடன் பத்து பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாபுடா என்ற சிறிய தீவில் தற்போது மனித நடமாட்டம் எதுவும் இல்லையென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
இது தவிர சென்ட் மார்ட்டின் என்ற பிரிதொரு தீவு முற்று முழுதாக அழிந்துபோயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சூறாவளி டர்க்ஸ் மற்றும் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தீவுகளையும் மீள நிர்மானிப்பதற்கு பத்து கோடி அமெரிக்க டொலர் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தசாப்த காலத்தில் இது ஒரு பாரிய சூறாவளியென கணக்கிடப்பட்டுள்ளது.
சூறாவளி மணிக்கு 180 மையில் வேகத்தில் வீசுகின்றது.