மும்பை தொடர் குண்டு வெடிப்பு – இருவருக்கு ஆயுள் தண்டனை

284 0

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலீம் மற்றும் கரிமுல்லா ஓசான் கான் ஆகியோருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தாஹிர் மொகமது மெர்ச்சண்ட் மற்றும் பிரோஸ் அப்துல் ரஷித் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ரியாஸ் அகமது சித்திக் என்ற மற்றொரு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1993 மார்ச் 12 ஆம் திகதி மும்பையில் பல பகுதிகளில் 12 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.

அவற்றில், 257 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 713 பேர் காயமடைந்தனர்.

இந்த தொடர்குண்டு வெடிப்புகளால் 27 கோடி இந்திய ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 24 ஆண்டுகளின் பின்னர், கடந்த ஜூன் ஐந்து பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துடன், அப்துல் கயும் கரிம் ஷெய்க் என்பவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்திருந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment