சிறுவர்களைப் பாதுகாப்போம் – தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில்

281 0

‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

கண்டி – திகனயிலுள்ள மத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சிறுவர்கள் மீதான வீட்டு வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், குற்றச்செயல்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து சிறுவர் சமூகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

கல்வி, சுகாதாரம், உளவியல் ஆலோசனைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக பிள்ளைகளை வலுவூட்டுவதற்கு இச்செயற்திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு வருட காலத்திற்குள் இச்செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment