மன்னாரில் உள்ள பல கோடி ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி இடம்பெறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
தலைமன்னார் ஊறுமலை பகுதியில் உள்ள சென் லோரன்ஸ் ஆலயத்தில் உள்ள மிகப் பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரித்து விற்பனை செய்ய ஒரு இரகசியக் குழுவினர் குறித்த ஆலயத்தில் உள்ள சில நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தி பல முயற்சிகளை எடுப்பதாகவும் தற்பொழுது இலங்கையில் பாவனையில் உள்ள குறைந்தவிலையிலான இடிதாங்கி ஒன்றினை அவ் ஆலயத்தில் பொருத்திவிட்டு ஆலயத்தில் பல ஆண்டு காலமாக பொருத்தப்பட்டுள்ள ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரித்து சுமார் நான்கு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
அத்துடன் இந்த அபகரிப்பு வேலை கிராமத்தில் உள்ள சில நபர்களுக்கு தெரிய வந்ததும் இது தொடர்பில் எதற்காக இதனை விற்பனை செய்ய முயற்சிக்கின்றீர்கள் என அவர்கள் ஆலயத்தில் உள்ள சில நிர்வாக உறுப்பினர்களை வினவி உள்ளனர் அதற்கு தமது திருட்டு வேலை வெளியில் செல்லாது அதிலிருந்து தப்பிக்க இதில் கிடைக்கும் பணத்தை எடுத்து சில அபிவிருத்திப் பணிகளை செய்ய இருப்பதாக குறித்த இரகசியக் குழுவினருடன் தொடர்பில் உள்ள ஆலய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது