கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான நிஸாம் காரியப்பர் இன்று முதல் (07) முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கட்சியின் செயலாளர் மாற்றம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
தற்காலிகமாக செயலாளர் பதவியிலிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அனுமதியுடனேயே இந்த செயலாளர் மாற்றம் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் காலங்களில் புதிய செயலாளர் நிஸாம் காரியப்பரும், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிரும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றிப்பாதையில் வழிநடத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
இதுவரை காலமும் செயலாளராக கடைமைற்றி, எனக்கு பக்கபலமாக செயற்பட்ட மன்சூர் ஏ. காதிருக்கு என் ஆழ்மனதிலிருந்து நன்றிகளைத் தெரிவிப்பதுடன், பிரதி செயலாளராக செயலாற்ற முன்வந்த அவரின் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்