நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் பல நாளைய தினம் மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, அலபாத, குருவிட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும் மாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.