பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ காலம் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 2 மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ காலம் செப்டெம்பர் மாதம் 3ம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் அதன் கால எல்லையை இன்னும் 6 மாத காலத்துக்கு நீடிக்குமாறு அவ்வாணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் ஆவண வேலைகளை நிறைவு செய்வதற்கு அதன் காலத்தை 2 மாதங்கள் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இவ்வாணைக்குழு நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.